மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
பாசக்கார நண்பர்கள், கீறிப்புள்ள போன்ற படங்களில் நடித்து வந்த யுவனுக்கு சமுத்திரக்கனி நடித்த சாட்டை படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. என்றாலும் அதையடுத்து அவர் நடித்த படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. தற்போது அவர் நடித்துள்ள அய்யனார் வீதி, இளமி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், டைரக்டர் பாலா இயக்கும் புதிய படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியிருக்கிறார் யுவன்.
மேலும், சசிகுமார்-வரலட்சுமி நடித்த தாரைத்தப்பட்டை படத்தை அடுத்து குற்றம் பரம்பரை பாணியில் விஷால், ஆர்யா, ராணா, அதர்வா போன்ற நடி கர்களை வைத்து மல்டி ஹீரோ படமொன்றை இயக்க திட்டமிட்டார் பாலா. ஆனால், என்ன காரணமோ அந்த படத்தை தள்ளி வைத்து விட்டு, தற்போது சாட்டை யுவனை நாயகனாக வைத்து பிராமணர்கள் சம்பந்தப்பட்ட ஒரு கதையை படமாக்குகிறார்.
அதோடு, தனது ஒவ்வொரு படங்களிலுமே நடிக்கும் ஹீரோக்களை டோட்டலாக மாற்றி விடும் பாலா, இந்த படத்திற்காக யுவனை தற்போது தாடி வளர்க்க சொல்லியிருக்கிறார். அதேடு இந்த படம் முடிகிற வரை வேறு எந்த படத்திலும் நடிக் கக்கூடாது என்றும் கூறியிருப்பவர், பாடியை பிட்னஸ் பண்ணுமாறும் சொல்லியிருக்கிறாராம். அதனால், தற்போது தாடி வளர்த்துக்கொண்டே பாடியை பிட்னஸ் செய்து கொண்டிருக்கும் யுவன், விக்ரமிற்கு சேது, சூர்யாவிற்கு நந்தா, ஆர்யாவுக்க நான் கடவுள், அதர்வாவுக்கு பரதேசி படங்கள் அமைந்தது போன்று எனக்கும் இந்த படம் திருப்புமுனையாக அமையும் என்று அடித்து சொல்கிறார்.