ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற ஆபாசப்படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தில் தற்போது சிம்பு நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு கேரக்டரின் பெயர்... மதுரை மைக்கேல்! இன்னொன்று 60 வயதுடைய அஸ்வின் தாத்தா! இந்த இரண்டு கேரக்டர்கள் குறித்த தகவல் வெளி வந்துவிட்டநிலையில் சிம்புவின் மூன்றாவது கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற கேள்வி மட்டும் நீடிக்கிறது.
இந்நிலையில் முதலாவதாக படமாக்கப்பட்ட மதுரை மைக்கேல் கேரக்டர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது எடிட் பண்ணி முடித்துள்ளனர். ஏஏஏ படத்துக்கு அந்த கேரக்டர் சம்பந்தப்பட்ட டீஸரை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த டீஸரை வருகிற 7 ஆம் தேதி நள்ளிரவு - அதாவது விடிந்தால் 8-ஆம் தேதி - 12 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள்.
சிம்புவுடன் தமன்னா, ஸ்ரேயா நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். மதுரை மைக்கேல் கேரக்டருக்கு தனி டீசர் வெளியிட்ட பிறகு மற்ற இரண்டு கேரக்டர்களுக்கு தனி டீசர் வெளியிட உள்ளனர்.