'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
தேவி எனும் திகில் படத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கும் தமன்னா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவரும் தேவி படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிப்பைத் தவிர நகைக்கடை நடத்தி வருமானம் தேடும் தமன்னா, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திரைப்படங்களை தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளாராம். பொதுவாக நடிகர்கள் பலரும் சொந்த தயாரிப்பு நிறுவனங்கள் நிறுவி படங்களை தயாரிப்பார்கள், ஆனால் நடிகைகளில் தயாரிப்பாளர்களாக மாறுபவர்கள் மிகச்சிலரே. அந்த வகையில் தமன்னா தயாரிப்பாளராக மாற முடிவு செய்துள்ளாராம். நடிகர் இயக்குனர் பிரவு தேவாவுடன் இணைந்து தமன்னா தயாரிப்பு நிறுவனம் துவங்கவுள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தேவி படத்திற்கு பின்னர் தமன்னா நாயகியாக நடித்து அசத்திய பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு தயாராகி வருகின்றது.