பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மெகா படம் ரெமோ. அருண்ராஜ்-நர்ஸ் ரெமோ என இரண்டுவிதமான கெட்டப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில் டாக்டர் காவ்யாவாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அக்டோபர் 7-ந்தேதி இந்த படம் திரைக்கு வரவிருப்பதால் இப்போது படத்திற்கான பிரமோஷன்களை முடுக்கி விடத் தொடங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அந்த வகையில், ஏற்கனவே தமிழகத்தில் அவ்வப்போது ரெமோ சம்பந்தப்பட்ட விளம்பரங்களை செய்து வந்தவர், இன்று அக்டோபர் 1-ந்தேதி மலேசியாவில் ஒரு பிரமாண்ட பப்ளிசிட்டியை செய்கிறார்கள். சுமார் 3 ஆயிரம் மக்கள் கூடும் அரங்கில் அந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ரெமோ படம் சம்பந்தப்பட்ட சில விசயங்களை வெளியிட்டு மக்களுக்கு எதிர்பார்ப்பை எகிற வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் இருவரும் கலந்து கொண்டு ரெமோ படத்தின் சுவராஸ்ய அனுபவங்களை மலேசிய தமிழர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்களாம்.