'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தில் ஜெகபதிபாபு, மைம்கோபி, டேனியேல் பாலாஜி, ஹரிஸ் உத்தமன் என பல வில்லன்கள் நடிக்கிறார்கள். அவர்களில் டேனியேல் பாலாஜிக்கு ஜெகபதிபாபுவுக்கு அடுத்தபடியான வில்லன் வேடமாம். அதனால் இதுவரை எத்தனையோ படங்களில் வில்லனாக நடித்திருந்தபோதும் இந்த படம் தனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று நினைக்கிறார் அவர்.
மேலும், பைரவா விஜய்யைப்பற்றி அவர் கூறுகையில், விஜய் முன்னணி நடிகராக இருந்தபோதும் அனைவரிடமும் அன்பாக பழகுகிறார். ஆலோசனைகள் வழங்குவது, அட்வைஸ் செய்வது, உதவி செய்வது என ரொம்ப நெருக்கமாகி விடுகிறார். அவரைப்பார்க்கையில் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. இந்த அளவுக்கு உடன் நடிக்கும் அனைவரிடமும் சகஜமாக சரிசமமாக பழகுவதில் விஜய்யை தவிர வேறு யாரையும் நான் பார்த்ததில்லை என்கிறார் டேனியேல் பாலாஜி.