ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு திரைக்கு வந்துள்ள எம்.எஸ்.தோனி படத்தில் ராம் சரண் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்பட்டது. தோனி கிரிக்கெட் விளையாடும் காட்சியில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவாக ராம் சரண் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதனை ராம் சரண் மறுத்துள்ளார். எம்.எஸ்.தோனி படத்தில் நடிக்கவில்லை என்று கூறிய அவர், அப்படத்தில் நடிக்க தன்னை யாரும் தொடர்பு கொண்டு பேசவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது, தமிழில் ஹிட்டான தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தில் நாயகனாக நடித்து வரும் ராம் சரண் அப்படத்தின் படப்பிடிப்புகளில் படு பிசியாக ஈடுபட்டு வருகின்றார். ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் துருவா படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குகின்றார். துருவா படத்திற்கு பின்னர் ராம் சரண் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.