வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன், சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் டீஜே படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். அக்டோபரில் துவங்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்புகளில் அல்லு அர்ஜூன், அக்டோபர் முதல் வாரத்தில் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது. பொதுவாக படத்திற்கு படம் சிகை அலங்காரத்தை மட்டும் மாற்றும் அல்லு அர்ஜூன் இப்படத்திற்காக தனது பேச்சு, உடல்மொழி, சிகை மற்றும் ஆடை அலங்காராம் என சகலத்திலும் புதுமை காட்ட திட்டமிட்டுள்ளாராம். இதனால் வட்டார பேச்சு வழக்கிற்காக, அல்லு அர்ஜூன் தற்போது பயிற்சி எடுத்து வருகின்றாராம். டீஜே என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே, ஒப்பந்தமாகியுள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.