ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங், நாசர் மற்றும் பலர் நடித்த இறுதிச்சுற்று திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவந்து வெற்றி வாகை சூடியது. முதல் படத்திலேயே இந்திய தேசிய விருது வென்ற பெருமை, இப்படத்தில் நடித்த ரிக்காசிங்கிற்கு கிடைத்தது. மேலும் இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் ரித்திகா சிங் நாயகியாக நடிக்க, நாயகனாக வெங்கடேஷ் நடிக்கின்றார். தெலுங்கில் குரு என்ற பெயரில் உருவாகும் இறுதிச்சுற்று படத்தின் ரீமேக்கை இயக்குனர் சுதாவே இயக்குகின்றார். தமிழில் இப்படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன், தெலுங்கிலும் இசையமைக்கின்றார். விசாகாப்படிணத்தில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு ஊட்டி சென்றுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக இப்பத்தின் தொலைக்காட்சி உரிமத்தை நடிகர் வெங்கடேஷ் கேட்டுள்ளார். இதற்கு தயாரிப்பு நிறுவனத்தாரும் சம்மதம் தெரிவித்துள்ளனராம்.