மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மனமந்தா, ஜனதா கேரேஜ் போன்ற தெலுங்கு படங்களில் நடித்து டோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்நிலையில் மோகன்லாலின் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ஒப்பம் படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம். இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் பார்வையற்றவராக நடித்திருந்த ஒப்பம், திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ஓவர்சீஸ் நெட்வொர்க் என்டர்டையின்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. முதலில் தெலுங்கில் ஒப்பம் படத்தை ரீமேக் செய்து வெளியிடலாம் என திட்டமிடப்பட்டது. மோகன்லால் நடித்த நேரடி தெலுங்கு படங்களான மனமந்தா மற்றும் ஜனதா கேரேஜ் என இரு படங்களும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஒப்பம் படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளதாம்.