ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மலையாளத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்தவர் சாய் பல்லவி. முதல் படத்திற்கு பிறகு டாக்டருக்கு படிக்கப்போனவர் அதன் பிறகு மீண்டும் தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது தங்கை பூஜா, காரா என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகிறார். எலெக்ட்ரான் மீடியா போர்ட் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அஜித் என்ற புதுமுகம் இயக்குகிறார் கமலேஷ் என்ற புதுமுகம் ஒளிப்பதிவு செய்கிறார். சுமேஷ் இசை அமைக்கிறார்.
பூஜாவுடன், கதிர், விஷ்ணுப்ரியா, ஜீவிதா ராஜேந்திரன், விஸ்வேஷ்வரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது. பூஜா அசப்பில் சாய் பல்லவி மாதிரியே இருக்கிறார். முகத்தில் பருக்கள் இல்லை என்பதுதான் இருவருக்குமான வித்தியாசம்.