பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கடந்த வாரம்தான் விஜயசேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படம் திரைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வருகிற அக்டோபர் 7-ந்தேதி றெக்க படம் திரைக்கு வருகிறது. ஒரு வார இடைவெளியில் இந்த படம் திரைக்கு வருகிறது. இதனால் நடிப்பு, டப்பிங் என்று பிசியாக இருக்கிறார் விஜயசேதுபதி. இதற்கிடையே மதிய இடைவேளை நேரங்களில் டைரக்டர்களை ஸ்பாட்டுக்கு வரவைத்து கதையும் கேட்கிறார். அதோடு, தனது முன்னாள் நண்பர்களை சந்திக்கவும் நேரம் ஒதுக்குகிறார்.
அந்த வகையில், தான் சினிமாவில் நடிக்க முயற்சித்தபோது தன்னுடன் பழகிய நண்பர்கள் இப்போது ஸ்பாட்டுக்கு தேடிச்சென்றால் அவர்களை தவிர்ப்பதில்லை விஜயசேதுபதி. அவர்களை கேரவனுக்குள் அழைத்து சென்று பேசி அனுப்புகிறார். அவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட நடிகர்களாகவோ, டெக்னீசியன்களாகவோ இருந்தால், அவர்களுக்கு டைரக்டர்களிடம் சிபாரிசு செய்கிறார். இப்படி பெரிய நடிகராக வளர்ந்த பிறகும் பழகிய நண்பர்களுக்கு விஜயசேதுபதி உதவி செய்வதை அவரது நட்பு வட்டாரங்கள் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.