Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்சய்குமார்!

30 செப், 2016 - 09:33 IST
எழுத்தின் அளவு:
akshay-kumar-again--in-director-priyadarshan-movie

பிரபல மலையாள இயக்குனரான பிரியதர்ஷன், மலையாளம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் படங்களை இயக்கி வருபவர். சமீபத்தில்தான் மலையாளத்தில் அவர் இயக்கிய ஒப்பம் படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதையடுத்து, தமிழில் அவர் இயக்கியுள்ள சில சமயங்களில் என்ற படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள அந்த படத்தை ஆஸ்கர் விருதுக்கும் அனுப்புகிறார்கள்.


இதற்கு முன்பு பிரியதர்ஷன் இயக்கிய காஞ்சிவரம் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் எய்ட்ஸ் நோயாளிகள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியிருக்கிறது. இதையடுத்து இந்தியில் ஒரு படம் இயக்குகிறார் பிரியதர்ஷன். அந்த படத்தில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தில் நடித்துவரும் அக்ஷய் குமார் நடிக்கிறார். அடுத்த ஆண்டு இந்த படம் தொடங்குகிறதாம். இதற்கு முன்பு பிரியதர்ஷன் இயக்கிய கட்டா மீட்டா உள்பட சில இந்தி படங்களில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in