'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு நடிகர் ராணா தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் மடைதிறந்து. இதை கழுகு, சிவப்பு, சவாலே சமாளி படங்களை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார், ரெஜினா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர சத்யராஜ், நாசர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்கள்.
இது 1945ம் ஆண்டு நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து உயிர்தியாகம் செய்த தமிழர்களை பற்றிய கதை. இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் கடந்த 20 நாட்களாக நடந்து வந்தது. நேதாஜி தமிழ்நாட்டுக்கு ரயிலில் வருவது போலவும், அவருக்கு இந்திய தேசிய ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செய்வதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் தனியார் இடத்தில் பழங்கால ரயில்வே ஷெட் போடப்பட்டு அதில் படம்பிடிக்கப்பட்டது.
இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் நடக்கிறது. அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பினாங்கு உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது. அங்கு பழமையான தெருக்கள், ரெயில் நிலையங்களுக்கு ஷெட் போடத் தேவையில்லை. அங்கு பழமையான விஷயங்கள் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. வருகிற 27ந் தேதி படக்குழுவினர் மலேசியா புறப்பட்டு செல்கிறார்கள். அங்கு ஒரு மாதம் வரை படப்பிடிப்பு நடக்கிறது.