சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தன் உடல் நிறம் குறித்து, தொடர்ந்து விமர்சிக்கப்பட்ட தால், தனியார் டிவி காமெடி நிகழ்ச்சியில் இருந்து, பிரபல நடிகை வெளியேறினார்..சமீபத்தில் வெளியான, பார்ச்ட் என்ற ஹிந்திப் படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை, தனிஷ்தா சாட்டர்ஜி, 35, பிரபல, டிவி சேனலின் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பார்ச்ட் படத்தை விளம்பரப்படுத்த, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், தன்னை கடுமையாக விமர்சித்த தால், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக, பேஸ்புக் சமூக வலைதளத்தில், தனிஷ்தா, செய்தி வெளியிட்டுள்ளார்;
அதில் அவர் கூறியுள்ளதாவது: இது காமெடி நிகழ்ச்சி என்பதால், கடுமையாக கிண்டல் செய்வோம் என கூறியிருந்தனர். கிண்டல், கேலிக்கு தயாராகத்தான் சென்றிருந்தேன். ஆனால், என் உடல் நிறம் குறித்து, தொடர்ந்து விமர்சித்தனர்; அதனால், பாதியிலேயே வெளியேறினேன்.