இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
ஜெயம்ரவி-ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கியவர் லட்சுமண். இவர் மீண்டும் அதே ஜோடியை இணைத்து போகன் படத்தை இயக்கியுள்ளார். அதோடு, ஜெயம்ரவியுடன் தனிஒருவன் படத்தில் நடித்த அரவிந்த்சாமியும் இந்த படத்தில் இன்னொரு நாயகனாக நடித்திருக்கிறார். கூடு விட்டு கூடு பாயும் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் முடிந்து இப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
மேலும், ரோமியோ ஜூலியட் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஹன்சிகா. ஆனபோதும் அதன்பிறகு அவரது மார்க்கெட் வீழ்ந்து விட்டது. அதனால் தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஆனால், போகன் படம் வெளியான பிறகு மீண்டும் தமிழில் ஹன்சிகாவின் மார்க்கெட் சூடுபிடித்து விடும் என்கிறார்கள். அந்த அளவுக்கு இதுவரை இல்லாத அள வுக்கு மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்துள்ளாராம். தியேட்டருக்கு வந்து போகன் படம் பார்க்கும் ரசிகர்கள் வெளியே சென்ற பிறகும் ஹன்சிகாவின் கதாபாத்திரம் அவர்களின் மனதில் ஒட்டிக்கொள்ளுமாம். அந்த அளவுக்கு டச்சிங்கான வேடத்தில் ஹன்சிகா நடித்துள்ளாராம்.