ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்த படம் தர்மதுரை. இந்த படத்தில் விஜயசேதுபதியின் மருத்துவமனையில் வேலை செய்யும் பெண்ணாக திருநங்கை ஜீவா என்கிற சினேகா நடித்திருந்தார். பெரும்பாலும் திருநங்கைகளை கிண்டல் செய்வது போன்ற காட்சிகளே படங்களில் இடம்பெற்று வந்த நிலையில், இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் காட்சிமைத்திருந்தார் சீனுராமசாமி.
அந்த படத்தில் நடித்த பிறகு நீண்டகாலமாக சினேகா இருக்குமிடமே தெரியாமல் இருந்து வந்த அவரது பெற்றோர் அந்த படத்தில் அவர் நடித்த பிறகு அவரை தேடிவந்து இணைந்தனர். இதனால் ஒரு சினிமா எனது பெற்றோருடன் என்னை சேர்த்து விட்டது என்று மகிழ்ச்சியுடன் பேட்டி கொடுத்தார். மேலும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டி ருந்தார்.
இந்நிலையில், தற்போது விஜய் நடிக்கும் பைரவா படத்திலும் ஒரு கேரக்டரில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் திருநங்கை சினேகா. அப்படி அவர் விஜய் படத்தில் நடிக்க சென்றபோது, தர்மதுரையில் சிறப்பாக நடித்திருந்ததாக அவரை பாராட்டி னாராம் விஜய். அதைக்கேட்டு சிலிர்த்துப்போன சினேகா, விஜய்யின் தீவிர ரசிகையான எனக்கு அவர் படத்தில் நடிக்க கிடைத்துள்ள வாய்ப்பு மட்டுமின்றி அவரிடம் கிடைத்த இந்த பாராட்டு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்கிறார்.