ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிறிய இடைவேளைக்குப்பிறகு ஜீவன் நாயகனாக நடித்த படம் அதிபர். அதையடுத்து ஷக்தி சிதம்பரம் இயக்கும் ஜெயிக்கிற குதிரை படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பின்னர் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் தொடங்கிவிட்டது.
மேலும், இந்த படத்தில் நடிகராகவே நடித்துள்ளார் ஜீவன். சினிமாவில் நடிகராவதற்காக முயற்சிக்கும் ஒருவர் கடும் போராட்டத்திற்கு பிறகு படவாய்ப்பு பெறுவாராம். ஆனால் அப்படி நடிக்கும் படம் தோல்வியடைந்து விடுமாம். இருப்பினும் தொடர்ந்து போராடும் ஜீவன் சினிமாவில் ஜெயிப்பதுதான் ஜெயிக்கிற குதிரையாம். ஆக, ஒரு நடிகையின் கதை போன்று ஒரு நடிகனின் கதையாக இந்த படம் உருவாகியிருக்கிறதாம்.