ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு, தமிழ் படங்களில் நடிக்க ஆசை வந்து விட்டது. சமீபத்தில், சென்னை வந்திருந்த அவர், தன் ஆசையை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். 'கமல், ரஜினி படங்களை விரும்பி பார்ப்பேன். தமிழில், படப்பிடிப்பை திட்டமிட்டு நடத்தி முடிப்பர். ஹிந்தி படங்களில் நடிக்கும்போது, நானும், அதே நடைமுறையைத் தான் பின்பற்றுகிறேன்' என்கிறார். சோனம் கபூர் நடிக்க வந்து, எட்டு ஆண்டுகள் ஆனாலும், இதுவரை ஒன்பது படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஒரு படம் நடித்தாலும், உருப்படியாக நடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். என் மனதை உருக வைக்கும் வகையிலான நல்ல கதை கிடைத்தால், தமிழில் நடிக்க தயார்' என்கிறார் அவர்.