விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் வருண் தவான். இயக்குநர் பிரதீப் சர்கார் இயக்கத்தில், வருணும், மெகாஸ்டார் அமிதாப் பச்சனும் இணைந்து ‛டப்பா குல்' எனும் படத்தில் நடிக்க போவதாகவும், இப்படத்தை ஆதித்யா சோப்ரா மற்றும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின . சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வருணிடம், அமிதாப் பச்சனுடன் நடிப்பதை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு வருண் கூறியதாவது......" ‛டப்பா குல்' படம் பற்றி வெளியாகிய செய்திகள் எல்லாம் வதந்தியாகும், இன்னும் இப்படம் பற்றி எதுவுமே உறுதிப்படுத்தவில்லை என்றார். அதேசமயம், யாருக்கு தான் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க பிடிக்காது" என்றும் கூறினார்.