மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இயக்குனர் ஹிரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் முதல் இரு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் தற்போது தயாராகி வருகின்றது. இன்டர்போல் ஆஃபிஸராக சூர்யா நடிக்கும் எஸ்3 படத்தில் அவருக்கு மனைவியாக நடிகை அனுஷ்கா நடிக்கின்றார். நடிகை ஷ்ருதிஹாசன் சூர்யாவிற்கு உதவும் பத்திரிக்கையாளராக நடிக்கின்றார். தலகோணம் பகுதியில் இப்படத்தின் இறுதிக்காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது. எஸ்3 படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியுள்ளது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் பிரபாஸ் போலீஸாக எஸ்3 படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகின்றது. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். டிசம்பர் 16ல் இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.