'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
4 வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் ஜோடியாக மனம் கொத்தி பறவை படத்தில் நடித்தவர் ஆத்மியா. அதன் பிறகு போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்தார். இரண்டுமே தோல்வி படங்கள். இதனால் அடுத்த வாய்ப்பு எதுவும் அவருக்கு கிடைக்வில்லை. வேறு படத்திலோ, வேறு மொழியிலோ படம் இல்லை. இதனால் வெறுத்துப்போய் வீட்டில் இருந்தவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார்கள்.
ஷாம் நடிக்கும் காவியன் படத்தில் ஆத்மியா தான் ஹீரோயின். தமிழ் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை பார்த்தசாரதி இயக்குகிறார். என்.எஸ்.ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், மோகன் இசை அமைக்கிறார். படம் முழுக்க அமெரிக்காவின் லாஸ்வேகா நகரில் படமாகி வருகிறது. இது ஒரு ரோட் டிராவல் திரில்லர். முந்தைய இரு படங்களிலும் சேலை, பாவாடை தாவணி கட்டி நடித்த ஆத்மியா இதில் மார்டன் லுக்கில் கவர்ச்சி காட்டி நடிக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு தனக்கு தமிழ் சினிமாவில் திருப்பம் அமையும் என்ற உறுதியாக நம்புகிறார் ஆத்மியா.