ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 2.ஓ. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் 350 கோடி பட்ஜெட்டில் தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அக்சய்குமார் வில்ல னாக நடிக்கும் இந்த படத்தில் எமிஜாக்சன் ஆக்சன் ரோலில் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணனும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஈவிபி வோல்டில் தொடங்கி புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையடுத்து சென்னை மற்றும் சில வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தி வந்த ஷங்கர், தற்போது மீண்டும் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவிற்குள் வந்திருக்கிறார். அந்த படப்பிடிப்பில் மீண்டும் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் கலந்து கொள்கிறார்களாம். மேலும், கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள 2.ஓ படத்தின் படப்பிடிப்பு இதன்பிறகு சில மாதங்கள் வெளிநாடுகளிலும் நடைபெற்றதோடு முடிவுக்கு வந்து விடுமாம். ஆக, டிசம்பர் மாதத்தோடு படப்பிடிப்பு வேலைகள் முடியும் என்கிறார்கள்.