ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிரிக்கெட் கேப்டன் தோனிக்கும், எனக்கும் இடையே ஒன்றுமில்லை; ஏன் எங்களை தொடர்பு படுத்துகின்றனர் என தெரியவில்லை, என, பிரபல நடிகை, ராய் லட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, ௩௫, வாழ்க்கை குறித்த திரைப்படம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில், விரைவில் வெளியாக உள்ளது.
கடந்த, 2008ல், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின்போது, தோனி விளையாடிய சென்னை அணியின் விளம்பரத் துாதராக, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை, ராய் லட்சுமி, ௨௭, இருந்தார்; இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தோனி திரைப்படம் குறித்து, ராய் லட்சுமி கூறியதாவது: தோனி படத்தில், என்னை சித்தரித்தும் காட்சிகள் உள்ளதா என கேட்கின்றனர்; இது ஏன் என, எனக்கு புரியவில்லை. எனக்கும், தோனிக்கும் இடையே எதுவும் இல்லை. அவர் திருமணமாகி, ஒரு குழந்தைக்கு தந்தையாகவும் உள்ளார். சம்பந்தமில்லாமல் என்னை ஏன், அவருடன் இணைத்து பேசுகின்றனர். இந்த படத்தில், என்னைப் பற்றிய விஷயங்கள் எதுவும் இருக்காது என, நம்புகிறேன்.