தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
கபாலி பட நடிகர், மைம் கோபி, ஆதரவற்ற மாணவ, மாணவியரை விமானத்தில் பறக்க வைத்து, நட்சத்திர ஓட்டலில் சாப்பிட வைத்துள்ளார். கபாலி, மாயா, மெட்ராஸ் படங்களில் நடித்தவர், மைம் கோபி. நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வரும் இவர், ஆதரவற்ற குழந்தைகளுக்காக, கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். ஆதரவற்ற மாணவ, மாணவியரை, மகிழ்விக்கும் வகையில், 20 பேரை நேற்று, சென்னையில் இருந்து, கோவைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். நட்சத்திர ஓட்டலில் விருந்தும் அளித்துள்ளார்; சுற்றுலா பகுதிகளுக்கும், அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.இதுகுறித்து நடிகர் கோபி கூறுகையில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு விமானப் பயணம் ஒரு கனவு; அதை நனவாக்கி உள்ளோம். இதில், என் நீண்ட நாள் கனவும் நிறைவேறி உள்ளது. இந்த பயணத்தால், அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளோம், என்றார்.