மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
1971ல் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஹசி எனும் போர்கப்பலையும், அப்போரினையும் மையப்படுத்தி உருவாகும் ஹசி எனும் திரைப்படத்தில் நாயகனாக ராணா நடிக்கிறார். இதில் அவர் கப்பற்படை அதிகாரியாக நடிக்கின்றார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தில் டாப்சி, ராணாவிற்கு ஜோடியாக நடிக்கின்றார். பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் 2017 பிப்ரவரி 24ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. ராணா நடிப்பில் ஹசி பிப்ரவரியிலும், பாகுபலி-2 ஏப்ரலிலும் என ராணாவிற்கு அடுத்த ஆண்டு அடுத்தடுத்து இரு படங்கள் வெளிவரவுள்ளன.