இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டூ மூவி பப்ஸ் சார்பில் ரகுநாதன், அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் பிரபு வெங்கடாச்சலம் இணைந்து தயாரிக்கும் படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம். கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ் நடிக்கிறார்கள். படத்தில் கிரிக்கெட் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக கலை இயக்குனர் பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி உள்ளார். இந்த மைதானத்தில் தொடர்ந்து 4 நாட்கள் இரவும் பகலும் படப்பிடிப்பு நடந்தது. இதில் 2 ஆயிரம் துணை நடிகர்கள் பங்கேற்று நடித்துள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் சுதர் கூறியதாவது: ஒரு காட்சிக்கு தேவையான இடமும், அரங்கமும் சரியாக அமைந்துவிட்டால், நிச்சயமாக அது வெற்றிக்கு வழி வகுக்கும். அப்படி ஒரு பிரமாண்ட மாதிரி மைதானத்தை திட்டம் போட்டு அமைத்து தந்திருக்கிறார் கலை இயக்குனர் ரெமியன். படப்பிடிப்பிற்கு தேவைப்படும் அனைத்தையும் எந்த வித மறுப்பும் இல்லாமல் எங்களுக்கு தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்து கொடுத்து வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து, எப்படி படத்தை தொழில் நுட்ப ரீதியாக மேலும் மெருகேற்றலாம் என்று திட்டம் போட்டு வருகிறோம்". என்கிறார் இயக்குனர் சுதர்.