திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
எதிர்நீச்சல், மான்கராத்தே, கத்தி, ஆம்பள என பல படங்களில் காமெடியனாக நடித்தவர் சதீஷ். இவர் தற்போது விஜய்யின் பைரவா, சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜயசேதுபதியின் றெக்க, லாரன்சுடன் மொட்ட சிவா கெட்ட சிவா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதில் விஜய சேதுபதியுடன் அவர் நடித்துள்ள றெக்க படத்தில் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் காமெடி காட்சிகள் நிறைய உள்ளதாம். ஆனால், நடித்து முடித்த பிறகு ஒருநாள் அப்படத்தை பார்த்தபோது இரண்டு முக்கியமான காமெடி காட்சிகளை எடிட்டர் பிரவீண் கத்தரித்திருந்தாராம். இதனால் பலத்த அதிர்ச்சிக்கு ஆளானாராம் சதீஷ்.
இந்நிலையில், றெக்க படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சதீஷ், றெக்க படத்தில் எனது இரண்டு காட்சிகளை கத்தரித்து விட்டார் எடிட்டர் பிரவீண். அடுத்து விஜய்யுடன் நான் நடித்து வரும் பைரவா படத்திற்கும் அவர்தான் எடிட்டர். ஆனால் இந்த படத்தைப்போலவே அந்த படத்திலும் எனது காட்சிகளை அவர் கத்தரித்தால், நான் சும்மா விடமாட்டேன். அவரது வீட்டு முன்பு தற்கொலை செய்து கொள்வேன் என்று நகைச்சுவையாக சொல்லி அவரை மிரட்டினார் சதீஷ்.