சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
துப்பாக்கியைத் தொடர்ந்து விஜய் நடித்த கத்தி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், அதன்பிறகு அஜித் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித் அடுத்தடுத்து சிவா இயக்கத்திலேயே நடிப்பதால் மீண்டும் அஜித்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. அதனால், தமிழில் அருள்நிதி நடித்து வெளியான மெளனகுரு படத்தை இந்தியில் ஆகிரா என்ற பெயரில் ரீமேக் செய்த முருகதாஸ், தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 25-ந்தேதி ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாளில், இந்திய அளவில் பல பிரபல நடிகர் நடிகைகள், டைரக்டர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், விஜய், அஜித் ரசிகர் களும் ஏராளமானோர் முருகதாஸ்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை இணைய தளத்தில் தெரிவித்து அவரை திக்குமுக்காட வைத்து விட்டனர். ஏ.ஆர்.முருக தாஸ்க்கு அவர்கள் போட்டி போட்டு வாழ்த்து கூறியதைப்பார்த்து திரையுலகினர் வியப்பில் உள்ளனர்.