‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
விஷால் நடிப்பில் உருவாகும் சண்டக்கோழி 2 படத்தை இயக்கவிருப்பதாக வருடக்கணக்கில் சொல்லிக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி. ஆனால் அதற்கான வேலைகள் நடைபெறுவதற்கான அறிகுறியையே தெரியவில்லை. அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்குப்படத்தை முடித்துவிட்டு சண்டக்கோழி-2 படத்தை இயக்கப்போவதாக சொல்லி வந்த லிங்குசாமி, இப்போது சண்டக்கோழி 2 படத்தை முடித்த பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக சொல்கிறார்.
லிங்குசாமியின் ஸ்டேட்மெண்ட்படி 2017 பிப்ரவரி மாத இறுதியில் அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்குப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக சண்டக்கோழி-2 படத்தை முடித்துவிடுவோம் என்கிறார்.
விஷாலோ கத்தி சண்டை படத்தில் நடித்து முடித்ததும் மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் படத்தை அவர் முடிக்க எப்படியும் 3 மாதங்கள் ஆகும். அதாவது இந்த வருடம் டிசம்பர் ஆகிவிடும். இப்படியான நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி-2 படத்தில் விஷால் நடிப்பதே இன்னும் தாமதம் ஆகலாம் என்கிறார்கள் படத்துறையினர்.