பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு சமீபத்திய அவரது ஹிந்திப்படமான 'அகிரா' திருஷ்டிப்பரிகாரமாக அமைந்துவிட்டது. அகிராவின் தோல்வி காரணமாக இனி சில வருடங்களுக்கு பாலிவுட் பக்கம் போக வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
தமிழில் படத்தை ஆரம்பிக்கலாம் என்றால் அஜித் பிடி கொடுக்காமல் இழுத்துக்கொண்டே போகிறாராம். வேறு ஹீரோவை வைத்து தமிழ்ப்படம் இயக்கினால் அஜித்தின் கோபத்துக்கு ஆளாக நேரும் என்பதால் தற்போது தெலுங்குப்பக்கம் கவனத்தைத் திருப்பிய ஏ.ஆர்.முருகதாசுக்கு மகேஷ் பாபுவின் கால்ஷீட் கிடைத்தது.
மகேஷ் பாபுவுடன் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடகர் என வெவ்வேறு ஏரியாக்களில் டிராவல் பண்ணும் எஸ்.ஜே. சூர்யா இந்தப்படத்தில் படு பயங்கர வில்லனாக நடிக்கிறார். இந்த கேரக்டருக்காக 'சிக்ஸ் பேக்' உடம்போடு சில காட்சிகளில் தோன்றுகிறாராம்.
சிக்ஸ்பேக் உடம்பை உருவாக்குவதற்காக தற்போது கடும் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப்படத்தை தமிழில் டப் செய்யும் எண்ணத்தோடு காமெடி கேரக்டருக்காக ஆர்.ஜே.பாலாஜியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இந்தப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகிறது.