பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
'பிரேமம்' புகழ் சாய் பல்லவி நடித்து இதுவரை இரண்டே படங்கள் தான் வெளியாகியுள்ளன.. ஆனால் இன்றைய தேதியில் பல வருடங்களாக நடித்துவரும் முன்னணி நடிகைகளையே அவரது புகழ் ஓவர்டேக் பணிவிட்டது. 'பிரேமம்' படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்திய சாய்பல்லவி, அந்தப்படத்தில் ஆடிய டப்பாங்குத்து டான்ஸ் மூலம் 'அட.. இவர் இவ்வளவு பெரிய ஆட்டக்காரியா' என மலையாள ரசிகர்களை வியக்கவைத்தார். ஆனால் டான்ஸில் தோல்வியை தழுவிய வருத்தமான ஒரு பக்கமும் சாய்பல்லவிக்கு இருக்கிறது..
சாய்பல்லவி முதன்முறையாக காம்பெடிஷனில் கலந்துகொண்டது அவரது ஆறு வயதில் தானாம்.. அப்போது சரியாக ஆடாத சாய்பல்லவியை, அந்த நிகழ்ச்சியின் ஜட்ஜம்மா உனக்கெல்லாம் டான்ஸ் வராது என சுடுதண்ணீராக வார்த்தைகளை கொட்டிவிட்டாராம். ஆனால் அழுது தீர்த்த சாய்பல்லவியை ஆசுவாசப்படுத்திய அவரது அம்மா, அவருக்கு ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோரின் பாடல்களை போட்டுக்காட்டி, அவர்களது நடன அசைவுகளையே பாடமாக கற்றுக்கொடுத்தாராம். அதன்பின் அவர் நான்காவது படிக்கும்போது காம்பெடிஷன் ஒன்றில் கலந்துகொண்டார் என்பதையும் வெற்றிக்கோட்டை தொட்டார் என்பதையும் சொல்லவும் வேண்டுமோ..?