ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் இணையும் மாஜி காதல் ஜோடிகள் சல்மான் மற்றும் கத்ரீனா கைப். சல்மான் கான், சில மாதங்களுக்கு முன் இயக்குநர் அலி அப்பாஸ் இயக்கத்தில் நடித்து வெளியாகி வசூலை குவித்த படம் ‛சுல்தான்'. தொடர்ந்து நம்பர் 1 நடிகராக இருக்கும் சல்மான், தற்போது இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் ‛டியூப் லைட்'படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சல்மான் மீண்டும் சுல்தான் படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் இயக்கவிருக்கும் ‛ஏக் தா டைகர்' படத்தின் இரண்டாம் பாகமான ‛டைகர் ஜிந்தா ஹே' படத்தை இயக்க உள்ளார்.
சில தினங்களுக்கு முன் இப்படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரீனாவை நடிக்க கேட்டனர். அதற்கு அவரும் சம்மதம் சொல்ல இப்போதை கத்ரீனாவை படத்தின் ஹீரோயினாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதைப்பற்றி கத்ரீனா கூறியதாவது....."‛டைகர் ஜிந்தா ஹே' படம் மூலம் சல்மான் உடன் மீண்டும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. ஏக்தா டைகர் படத்தின் தொடர்ச்சியில் நாங்கள் இருவரும் நடிப்பது மிகச்சிறப்பாக இருக்கும்'' என்றார்.
‛டைகர் ஜிந்தா ஹே' படம் அடுத்த ஆண்டு, கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.