தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கன்னடத்தில் வெளியான யூ டேர்ன் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது தமிழில் மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கவுதம் கார்த்திக் நடிக்க இருக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, வந்தான் வென்றான். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கும் படம் இது. ஆயிரா பிலிம்ஸ் சார்பில் ஆஷாஸ் தயாரிக்கிறார். வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் 12ந் தேதி படப்பிடிப்புகள் தொடங்குகிறது. ஒரே ஷெட்யூலில் 30 நாட்களில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். காதல், ஆக்ஷன் கலந்த திரில்லர் கதை. கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்திற்காக நடந்த போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார் ஸ்ரத்தா. வருகிற 30ந் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவருகிறது.