அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
பொதுவாக காமெடியன்கள் தான் பிற்காலத்தில் ஹீரோக்களாக மாறுவார்கள். ஆனால் ஹீரோவாக இருந்து காமெடியன் ஆனவர் சுதாகர். கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆந்திராக்காரர். சுதாகர், ராதிகா ஜோடிதான் அந்தக் காலத்தில் மேட்பார் ஈச் அதர் ஜோடி. சுவரில்லாத சித்திரங்கள், நிறம் மாறாத பூக்கள், சக்களத்தி, குருவிக்கூடு, ருசி கண்ட பூனை, ஒருத்தி மட்டும் கரையினிலே, நதி ஒன்று கரை மூன்று, தரையில் வாழும் மீன்கள், கல்லுக்குள் ஈரம், எங்க ஊர் ராசாத்தி உள்பட பல படங்களில் நடித்தார். பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்கள்.
நன்றாக நடித்துக் கொண்டிருந்தபோதே திடீரென காணாமல் போனார். சொந்த மாநிலமான ஆந்திராவில் நடித்து அங்கு புகழ்பெற வேண்டும் என்று போனார். ஆனால் தமிழ் நாட்டில் கிடைத்த வாய்ப்புகள் ஆந்திராவில் கிடைக்கவில்லை. அங்கு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். மீண்டும் அவர் தமிழுக்கு திரும்ப நினைத்தபோது இங்கு அவர் இடத்திற்கு பலர் வந்துவிட்டார்கள். அதனால் மீண்டும் ஆந்திரா சென்றவர். தன்னை காமெடி நடிகனாக மாற்றிக் கொண்டு 100 படங்களுக்கு மேல் காமெடியானாகவே நடித்தார். தமிழில் அவர் காமெடியனாக நடித்த படம் ரஜினி நடித்த அதிசய பிறவி மட்டுமே.