‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நந்தா, ரிச்சர்ட், ஷாரிக்கா, உஷாஸ்ரீ, இளவரசு நடித்துள்ள படம் கள்ளாட்டம் ஒளிப்பதிவாளர் ரமேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். வொயிட் ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் சவுண்டியன், பிரகாஷ், சுமன் தயாரித்துள்ளனர். உமர் எழிலன் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்களை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.
பின்னர் படம் பற்றி நந்தா கூறியதாவது: இக்கதை ஒரு முழுமையான போலீஸ் ஸ்டோரி . நான் ஏற்கனவே வேலூர்மாவட்டம் படத்தில் போலீசாக நடித்திருக்கிறேன்.ஆனால் இக்கதை வழக்கமான சினிமாவில் வருகின்ற போலீஸ் ஸ்டோரி போல் இல்லாமல், முழுமையாக மாறுபட்ட சினிமாவாக இருக்கும், மற்ற படங்களை போல் குடும்பம்,. செண்டிமென்ட் " போன்ற காட்சிகள் இப்படத்தில் இல்லை. மொத்தம் 90 நிமிடம் மட்டும்தான் படம். முதல் பகுதி 45 நிமிடம் இரண்டாம் பகுதி 45 நிமிடம் என்று பிரித்துள்ளார்கள்.
ஒரே ஒரு பாடல் மட்டும்தான், அது ஒரு கலர்புல்லான கவர்ச்சி பாடலாகும். காதலுக்கு தொடர்புடைய எந்த ஒரு காட்சியும் படத்தில் இல்லை என்பதுதான் காரணம். படத்தில் கதாநாயகி தோன்றும் காட்சிகள் மிகவும் குறைவு ஆங்கில திரைப்படத்திற்கு நிகரான படமாக இருக்கும் . மொத்தம் 17 நாட்கள் படபிடிப்பு நடந்தது என்றார் நந்தா.