ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ஹரிதாஸ், உன் சமயலறையில் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார் சினேகா. பின்னர், காவல் உள்ளிட்ட ஓரிரு படங்களில் கெஸ்ட் ரோலில் வந்து சென்றார். அதையடுத்து, கர்ப்பமான அவர் 2015-ல் மகன் விகான் பிறந்த பிறகு மீண்டும் நடிக்க தன்னை தயார்படுத்தியவர் இப்போது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க களமிறங்கி விட்டார்.
தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சினேகா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், தன்னை கவர்ந்த நடிகராக விஜய சேதுபதியை அவர் குறிப்பிட்டுள்ளார். அதுபற்றி சினேகா கூறும்போது, விஜய சேதுபதி ஒரு ரியல் நடிகர். அவரிடம் ஹீரோயிசம் இல்லை. அவரது கதை தேர்வும், வசனம் பேசுவதும் புதுமையாக உள்ளது என்கிறார்.