இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பின்னர் சுப்ரமணியபுரம் படம் மூலம் இசையமைப்பாளரானவர் ஜேம்ஸ் வசந்தன். தொடர்ந்து பசங்க, ஈசன் என 15 படங்கள் வரை இசையமைத்தவர், வானவில் வாழ்க்கை என்ற படத்தில் இயக்குனராகவும் உருவெடுத்தார். பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்ட அந்த படம் தோல்வியடைந்து விட்டது. இருப்பினும் மீண்டும் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
முதல் படத்தை இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை அமைத்திருந்த அவர், இந்த படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்குகிறாராம். அதன்காரணமாக இப்படத்தில் முன்னணி மாஜி ஹீரோயின்களான ராதிகா, குஷ்பு, சுகாசினி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். ஏற்கனவே குற்றம் கடிதல் பட பிரம்மா இயக்கும் மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா, பானுப்பிரியா, ஊர்வசி, சரண்யா ஆகியோர் நடிக்கும் நிலையில், இந்த படத்திலும் மாஜி ஹீரோயின்களே பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.