Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தனது படத்தில் மகனை இயக்குனராக அறிமுகப்படுத்தும் மோகன்லால்..!

25 செப், 2016 - 16:13 IST
எழுத்தின் அளவு:
pranav-mohanlal-son-of-mohnanlal-is-ready-to-debut-as-director

மற்ற சினிமா பிரபலங்களின் வாரிசுபோல தனக்கு நடிகனாகும் எண்ணம் இல்லை என்பதை ஏற்கனவே தெளிவாக்கிவிட்டார் சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லால். காரணம் அவரது இலக்கு டைரக்சன் தான். அதற்கேற்றவாறு இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக தொழில் கற்றுவருகிறார். கடந்த வருடம் 'லைப் ஆப் ஜோஸுட்டி' படம் பண்ணும்போதே அடுத்து தனியாக படம் இயக்கும் அளவுக்கு ப்ரணவ் தயாராகிவிட்டார் என அவரது குருநாதர் ஜீத்து ஜோசப் சர்டிபிகேட் கொடுத்திருந்தார்.. ஆனால் இன்னும் ஒரு படம் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டுத்தான் தனியாக படம் இயக்குவது பற்றி யோசிப்பேன் என்று சொன்ன ப்ரணவ், அடுத்ததாக ஜீத்துவின டைரக்சனில் சமீபத்தில் வெளியான 'ஊழம்' படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி முடித்துவிட்டார்.


அனேகமாக இனி தனது முதல் படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்குவார் என்றே தெரிகிறது. அடுத்து எழும் மிகப்பெரிய கேள்வி அவர் முதன்முதலில் இயக்கப்போகும் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பதுதான்.. நிச்சயம் யாரோ ஒரு இளம் முன்னணி நடிகர் தான் நடிப்பார் என்று அனைவரும் ஆருடம் சொன்னாலும், இன்னொரு பக்கம் அவரது தந்தை மோகன்லாலே தனது மகன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அப்போதுதான் தனது மகனுக்கான சினிமா அஸ்திவாரம் பலமாக அமையும் என மோகன்லால் நினைக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in