பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வெளியாகவிருக்கும் படம் ‛எம்எஸ் தோனி, தி அன்டோல்ட் ஸ்டோரி. இந்தப்படத்தில் தோனியாக சுசாந்த்சிங் ராஜ்புட் நடித்துள்ளார். தோனி மனைவி சாக்ஷியாக கைரா அத்வானி நடித்துள்ளார். அனுபம் கெர், பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் படக்குழு மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்தப்படம் வெளியாவதற்கு முன்பே படம் எடுக்க போட்டதில் கிட்டதட்ட முக்கால் வாசி வசூலை எடுத்துவிட்டது. படம் தற்போதே 90சதவிதம் வசூலை எடுத்துவிட்டதாக படக்குழு தெரிவித்து உள்ளது.
எம்.எஸ்.தோனி படத்தின் இசை உரிமையை 5 கோடி ரூபாய் கொடுத்து பெற்று உள்ளனர். வெளிநாட்டில் படத்தை திரையிட வெளிநாட்டு விநியோகிஸ்தற்கள் படத்தின் உரிமையை படக்குழுவிடமிருந்து 10 கோடிக்கு பெற்று உள்ளனர் . சாட்லைட் உரிமைக்காக 55 கோடி வசூலித்து உள்ளது தோனி. மேலும் பல வழிகளில் 20 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது இப்படம்.
எம்.எஸ்.தோனி படம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருக்கிறது.