'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் சந்தியா. காதல் படத்தில் அறிமுகமானதால் அதன்பிறகு அவர் காதல் சந்தியா என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து டிஷ்யூம், வல்லவன், கூடல்நகர் என நடிக்கத் தொடங்கியவர் தென்னிந்திய மொழிகளில் சுமார் 40 படங்களில் நடித் துள்ளார். கடைசியாக தருண்கோபி நடித்த திமிறு-2 வெறி என்ற படத்தில் நடித் தார்.
அந்த வகையில், பரத், சிம்பு, பிருத்விராஜ், லாரன்ஸ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள காதல் சந்தியாவுக்கு கடந்த 2015ம் ஆண்டு வெங்கட் சந்திரசேகரன் என்பவருடன் திருமணமானது. அதையடுத்து நடிப்பதை நிறுத் திக்கொண்ட சந்தியா சொந்த ஊரான கேரளாவில் செட்டிலாகி விட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.