இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஹீரோயின்கள் பஞ்சம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. எப்போதுமே டாப் லிஸ்ட்டில் இருக்கும் ஹீரோக்களுடன் மட்டுமே டாப் லிஸ்டில் இருக்கும் ஹீரோயின்கள் ஜோடி சேர்ந்து நடிப்பார்கள். எப்போதோ ஒரு முறைதான் இரண்டாம் கட்ட ஹீரோயின்களைத் தங்களது படங்களின் இரண்டாவது ஹீரோயின்களாக நடிக்க வைப்பார்கள். ஹீரோயின்கள் விஷயத்தில் நாங்கள் தலையிடுவதே இல்லை என ஹீரோக்கள் சொன்னாலும், அது உண்மையல்ல. தங்களுக்கான ஜோடி யார் என்பதை தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை விட அவர்களே தீர்மானிக்கிறார்கள்.
அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பது பெரிய விஷயமில்லை. இருவருமே டாப் லிஸ்ட் நட்சத்திரங்கள். ஆனால், விஜய் ஜோடியாக 'பைரவா' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது பெரிய விஷயம். இப்போதுதான் கீர்த்தி சுரேஷ் வளர்ந்து வருகிறார். அதற்குள் விஜய் ஜோடியாக அவர் நடிப்பது அவருக்கு பிரமோஷன்தான். சூர்யா ஜோடியாக ஸ்ருதிஹாசன் 'எஸ் 3' படத்தில் நடித்துள்ளார். சமந்தா திருமணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். அனுஷ்கா ஏறக்குறைய அக்கா தோற்றத்திற்கு வந்துவிட்டார். தமன்னா ஹீரோக்களைப் பார்க்காமல் கதைகளை மட்டுமே பார்க்கிறார், நயன்தாராவும் அப்படியே. இவர்களைத் தவிர வேறு ஹீரோயின்கள் டாப் லிஸ்ட்டில் இப்போதைக்கு இல்லை.
சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்திற்கும், விக்ரம் அடுத்து நடிக்கப் போகும் 'சாமி 2' படத்திற்கும், தனுஷின் 'வட சென்னை' படத்திற்கும் யார் ஹீரோயின் என்பது இன்னும் அறிவிக்கப்படாமலே உள்ளது. முந்தைய பாராவில் சொன்ன பட்டியலில் உள்ள டாப் லிஸ்ட் நடிகைகள் நடிக்க வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இதனால் அடுத்த டாப் லிஸ்ட் நடிகைகள் யார் என்பதை இனி வரும் படங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எப்படியும் 2017ல் டாப் லிஸ்ட் நடிகைகள் பட்டியலில் பெரிய மாற்றம் வர வாய்ப்புகள் அதிகம்.