இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். கடந்த ஜூலை மாதம் 22ந் தேதி உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. 150 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் நாட்டில் இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளிவரும் முன்பே படங்கள் இணைய தளங்களில் திருட்டுத் தனமாக வெளியாவதை தடுக்க தயாரிப்பாளர் தாணு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் 164 இணையதள சேனல்களுக்கு தடை விதித்தது. அப்படி இருந்தும் படம் வெளியான அன்றே பல இணையதளங்களில் திருட்டுத்தனமாக படம் வெளிவந்தது.
தற்போது முறைப்படி, உரிமம் பெற்ற இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. ஹீரோ டாக்கீஸ் இணைய தளத்தில் கட்டணம் செலுத்தி டவுண்ட்லோட் செய்து படத்தை பார்க்கலாம். எச்டி 1080 பிக்சர் குவாலிட்டியிலும், 5.1 சவுண்ட் குவாலிட்டியிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில சப் டைட்டிலுடனும் படத்தை பார்க்கலாம்.