ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஐதராபாத்தில் ஆல் லைட்ஸ் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் நடந்து வருகிறது. இதில் அறிமுக இயக்குனர்களுக்கான பிரிவில் கதிர் நடித்த சிகை படம் ஆங்கில சப் டைட்டிலுடன் கடந்த 25ந் தேதி திரையிடப்பட்டது. படம் பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் குவித்துள்ளது.
சர்வதேச பட விழாக்களில் பங்கேற்பதற்கு ஏற்ற வகையில் படத்தின் பாடல்களை நீக்கி, நீளத்தை குறைத்து ஆங்கில சப் டைட்டிலுடன் தயார் செய்திருக்கிறார்கள். மதயானைகூட்டம், கிருமி படங்களில் நடித்த கதிர் இந்தப் படத்தில் திருநங்கையாக நடித்திருக்கிறார். காக்கா முட்டை மணிகண்டன் உதவியாளர் ஜெகதீசன் சிபு இயக்கி உள்ளார். டிவைன் ஸ்டூடியோ சார்பில் லோகு தயாரித்துள்ளார். நவின்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரான் யோகன் இசை அமைத்துள்ளார். ராஜ்பரத், ரித்விகா, ராஜேஷ் சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஆங்கிலத்தில் ப்ளோசம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இன்னும் பல திரைப்பட விழாக்களுக்கு சிகை அனுப்பப்பட இருக்கிறது.