ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
ஆச்சி மனோரமா, ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார். காமெடி மற்றும் குணசித்ர நடிகையாக வலம் வந்த மனோராமா கொஞ்சும் குமரி, அலங்காரி படத்தில் ஹீராயினாகவும் நடித்தார். கொஞ்சும் குமரியில் ஆர்.எஸ்.மனோகர் ஹீரோ, அலங்காரியில் சுருளிராஜன் ஹீரோ.
ஆச்சி மனோரமா ஒரு பாலிவுட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தின் பெயர் குன்வாராபாப். இது ஒரு காமெடி படம். 1974ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் பிரபல இந்தி காமெடி நடிகர் மெகமூத் ஜோடியாக நடித்தார். இவர்கள் இருவர் தவிர லலிதா பவார், நசிர் உசேன் ஆகியோரும் நடித்திருந்தார்கள். நாயகனாக நடித்த மெகமூத்தே நடித்திருந்தார். இதில் ஆச்சி மனோரமா சொந்தமாக இந்தியில் பேசி நடித்திருந்தார். அதன்பிறகு சில இந்தி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் ஹீரோயினாக நடித்தது இந்தப் படத்தில் மட்டும்தான்.