ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எவர்கிரீன் மூவி இன்டர் நேசனல் தயாரித்துள்ள படம் காகித கப்பல். அப்புக்குட்டி, தில்லிஜா, பவர்ஸ்டார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிவராமன் இயக்கியுள்ளார். பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், வெற்றிமாறன், மற்றும் நட்டி நடராஜ், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், இந்த படத்தின் பாடல், டிரைலரைப் பார்த்தேன் சிறப்பாக உள்ளது. அப்புக்குட்டியும், தில்லிஜாவும் நன்றாக நடித்துள்ளனர். அப்புக்குட்டி தனக்கு பொருத்தமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அதேபோல் இந்த படத்தில் பவர்ஸ்டார் இருப்பது படத்துக்கு பெரிய பலம். அவரது பெயரைக்கேட்டாலே சிரிக்கிறார்கள்.
மேலும், நான் 70 படங்களை இயக்கியிருக்கிறேன். ஆனால் இப்போதைய இளையதலைமுறை இயக்குனர்களான வெற்றிமாறன், சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்டோரின் படங்கள் ஆச்சர்யப்படும் வகையில் உள்ளது. அதிலும், வெற்றிமாறனின் விசாரணை படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது பெருமையாக உள்ளது. யாராக இருந்தாலும் சினிமாவில் ஜெயிக்க நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை தான் அவர்களை உயர்த்தும். திறமைகளை வெளிப்படுத்த ஒவ்வொரு இயக்குனர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். முக்கியமாக நம்பிக்கையுடன் உழைக்க வேண்டும். நான் இதை ஒரு அட்வைசாக சொல்லவில்லை. நான் சினிமாவில் பெற்ற அனுபவத்தைக்கொண்டு சொல்கிறேன்.