‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தனுஷ் தயாரித்த காக்கா முட்டை படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியவர் மணிகண்டன். திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட விருதுகளை பெற்ற பிறகு வெளியிடப்பட்ட அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஸ்டார் வேல்யூ இல்லாமல் கதையை நம்பி இரண்டு சிறுவர்களை வைத்து அந்த படத்தை இயக்கிய மணிகண்டன் பேசப்படும் இயக்குனராகி விட்டார். அதையடுத்து, விதார்த் தயாரித்து நடித்த குற்றமே தண்டனை படத்தை இயக்கினர்.
தற்போது தான் சினிமாவில் இயக்குனராவதற்கு முன்பு தனது குறும் படங்களில் நடித்த விஜயசேதுபதியை நாயகனாக வைத்து ஆண்டவன் கட்டளை படத்தை இயக்கியுள்ளார். லண்டன் சென்று பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ஒருவன் அதற்காக எடுக்கும் முயற்சிகளும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார். மேலும், இதற்கு முன்பு இரண்டு படங்களையும் மணிகண்டன் என்ற பெயரில் இயக்கிய அவர், இந்த படத்தின் இறுதியில் தனது பெயரை மணிகண்டன் சந்திரா மதியழகன் என்று டைட்டீல் கார்டில் குறிப்பிட்டுள்ளார்.