ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் தான் தர்மதுரை வெளியானது. அதையடுத்து தற்போது ஆண்டவன் கட்டளை வெளியாகியுள்ளது. அக்டோபர் 7-ந்தேதி றெக்க ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆக, விஜயசேதுபதியின் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலும், தற்போது வெளியாகியுள்ள ஆண்டவன் கட்டளை படம் திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலும் வசூல் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு, விஜய்சேதுபதியுடன் ரித்திகா சிங், நாசர், பூஜா திவாரியா, யோகிபாபு, சிங்கம் புலி என பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஜயசேதுபதியின் நடிப்பு, தயாரிப்பாளர் அன்பு செழியனை வெகுவாக கவர்ந்து விட்டதாம். அதையடுத்து ஆண்டவன் கட்டளை படமும், உங்களது நடிப்பும் எனக்கு மிக திருப்தியாக உள்ளது என்று சொல்லி விஜய்சேதுபதிக்கு தனது அன்பு பரிசாக ஒரு தங்க செயினை பரிசாக கொடுத்துள்ளாராம் தயாரிப்பாளர் அன்புசெழியன்.