தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் ஆயுத பூஜைக்கு திரைக்கு வருகிறது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் மெகா பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் என்பதால், அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட்டு ஒரே வாரத்தில் போட்ட பணத்தை எடுத்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். மேலும், ரெமோ படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மிகப் பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறார்களாம். அதனால் படம் திட்டமிட்டதை விட அதிகப்படியாக வசூலித்து விடும் என்கிற நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாம்.
மேலும் ரெமோ படத்தின் டிரைலருக்கு வெளியான 5 நாளில் இதுவரை 63 ஆயிரம் பேர் லைக் கொடுத்துள்ளார்களாம். கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளார்களாம். ஆக, சிவகார்த்திகேயன் படத்துக்கு கிடைத்திருக்கும் இந்த ஆதரவு சில இரண்டாம் தட்டு ஹீரோக்களுக்கு கிடைப்பதை விட அதிமாகி இருக்கிறது. அதனால் இரண்டாம் தட்டு நடிகர்களுக்கு சிவகார்த்திகேயன் இந்த வளர்ச்சி உள்ளூர அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.