ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு காலத்தில் த்ரிஷாவுடன் நடிக்க ஆர்வம் காட்டிய முன்னணி ஹீரோக்கள் இப்போது த்ரிஷாவை வேண்டாம் என்று சொல்கிற அளவுக்கு திகட்டிவிட்டார். இளம் ஹீரோக்கள் கூட த்ரிஷா உடன் நடித்தால் நம் இமேஜ் போய்விடும் என்று நினைக்கத் தொடங்கிவிட்டனர். எனவே சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டார் த்ரிஷா.
சதுரங்கவேட்டை 2 படத்தில் தற்போது அரவிந்த்சாமிக்கு ஜோடியாகி இருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடித்து கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் 'சதுரங்கவேட்டை'. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். அதை லிங்குசாமி தயாரிப்பதாக இருந்தநேரத்தில் பெரும்கடனாளியானார் லிங்கு. எனவே அப்போது கைவிடப்பட்ட 'சதுரங்கவேட்டை-2' இப்போது உருவாகவிருக்கிறது.
இந்தபடத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை சதுரங்கவேட்டை இயக்குநர் ஹெச்.வினோத் எழுதுகிறார். 'சலீம்' படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்குகிறார். அராவிந்தசாமி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் லேட்டஸ்ட் இணைப்பாக த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.