ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராஜுமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' படத்தை தயாரித்த 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வரவிருக்கிறது - கார்த்தி நடிக்கும் 'காஷ்மோரா'. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பட இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் மொட்டைத்தலையுடன் ஒரு வேடம் ஏற்றிருக்கிறார்.
காஷ்மோரா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகிய இரண்டு பேர் நடிக்கின்றனர். கார்த்தியின் அப்பாவாக விவேக் நடித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கலை இயக்கத்தை செய்துள்ளார் ராஜீவன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 'காஷ்மோரா' படத்தை தீபாவளி வெளியீடாக ரிலீஸ் செய்ய உள்ளனர். அதற்கு முன்னதாக 'காஷ்மோரா'வின் டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் காஷ்மோர டிரைலர் மற்றும் பாடல்களை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ஆம் தேதி ஆயுத பூஜை அன்று ' காஷ்மோரா'வின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகிறது. கார்த்தி நடித்த படங்களிலேயே இப்படம்தான் பெரிய பட்ஜெட்டாம். சுமார் 15 கோடி செல்வில் உருவாகியிருக்கிறது.